சுட்டெரிக்கும் வெயிலினால் நத்தக்காடையூர் அருகே ரத்தினபுரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

சுட்டெரிக்கும்  வெயிலினால் நத்தக்காடையூர் அருகே ரத்தினபுரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
x
தினத்தந்தி 2 July 2021 1:55 AM IST (Updated: 2 July 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலினால் நத்தக்காடையூர் அருகே ரத்தினபுரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

முத்தூர், 
 சுட்டெரிக்கும்  வெயிலினால் நத்தக்காடையூர் அருகே ரத்தினபுரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ரத்தினபுரி குளம்
 நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினபுரியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் மழைக்காலங்கள் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் நேரங்களில் அதிக நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பும்.  இந்த குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி கொக்குமடை, ஓடக்காடு, ஈஸ்வரன் கோவில் பகுதி வழியாக செல்லும் ஓடையில் செல்லும்.
இந்த  உபரி நீர் மூலம்  ரத்தினபுரி, நஞ்சப்பகவுண்டன்வலசு, உலகுடையார்பாளையம், ஆலாங்காட்டுப்பதி, நாச்சிமுத்து நகர், ஓடக்காடு, சந்தைப்பேட்டை, வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். 
இதனால் இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும்.
கோடை வெயில்
இந்த நிலையில்  ரத்தினபுரி குளம் நிரம்பி கடந்த 4 மாத காலமாக  கடல் போல் காட்சியளித்தது. தற்போது  வெயிலின் உக்கிர தாக்கம் அதிகமாக உள்ளது.  இதனால் இந்த ரத்தினபுரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் விரைவில் இப்பகுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையினால் இந்த குளத்திற்கு மீண்டும் நீர்வரத்து அதிக அளவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story