திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 2 July 2021 2:00 AM IST (Updated: 2 July 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், தலைவர் பழனிசாமி, துணை செயலாளர் சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 1,500-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த ரூ.510 தினசரி ஊதியம் வழங்காமல் குறைத்து வழங்கப்படுகிறது. 
தொழிலாளர்களும் பிடித்தம் செய்யும் பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. தொகைக்கான முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் துப்புரவு தொழிலாளர்கள் சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
பின்னர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அதில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள நிலுவையில் தலா ரூ.10 ஆயிரத்தை உடனடியாக பட்டுவாடா செய்வதாகவும், பிடித்தம் செய்யும் தொகைக்கு ஆவணங்கள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், கலெக்டர் அறிவித்த சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Next Story