2 மாதத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்
2 மாதத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்
புதுச்சேரி, ஜூலை.2-
கொரோனாவின் 2-வது அலை பரவதொடங்கியதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவையில் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 பேருடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து புதுவையில் 2 மாதத்திற்கு பிறகு நேற்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. பழைய கோர்ட்டு வளாகம் அருகே உள்ள சாலையில் நடிகர் பிரித்திவிராஜ், நடிகை ராஷி கண்ணா ஆகியோர் நடித்து வரும் மலையாள மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நடிகை ராஷி கண்ணா காரில் வந்து இறங்கி ஒரு ஓட்டலின் உள்ளே செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பில் பணியாற்றிய கலைஞர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story