பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொண்டி,
தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட வர்கள் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா செயலாளர் சேதுராமு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தாலுகா குழு நாகநாதன், நாகூர் பிச்சை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story