கும்மிடிப்பூண்டி சிப்காட் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மாத்திரைகளை திருடிய வழக்கில் ஊழியர்கள் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி சிப்காட் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மாத்திரைகளை திருடிய வழக்கில் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் அங்கு உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், சர்க்கரை நோய்க்கான 4 ஆயிரத்து 200 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.68 ஆயிரம் ஆகும். இது குறித்து முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மாத்திரைகளை திருடி வெளி சந்தையில் விற்பனை செய்ததாக ஆஸ்பத்திரி ஊழியர்களான சென்னை அயனாவரததை சேர்ந்த ராபர்ட் (வயது 40), வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திகேயன் (36) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story