தேசிய ஊரக வேலை திட்டத்தில் இந்த ஆண்டு பணி வழங்கப்படவில்லை - கவுன்சிலர் குற்றச்சாட்டு
தேசிய ஊரக வேலை திட்டத்தில் இந்த ஆண்டு பணி வழங்கப்படவில்லை என்று சோழவரம் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
பொன்னேரி,
சோழவரம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் தேவி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிர்வாக மேலாளர் லோகிதாசன் வாசித்தார்.
பின்னர் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் பேசும்போது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு இந்த நிதியாண்டில் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பி கடந்த ஆண்டில் 35 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி பதிலளிக்கையில்:-
தேசிய ஊரக வேலை திட்டப்பணி தொடங்க உள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊராட்சியில் பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்களை கவுன்சிலர்களுக்கான அலுவலகமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கவுன்சிலர் பாஸ்கர் பேசுகையில்:-
ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கவுன்சிலர்கள் பெயர் மற்றும் தொலைபேசி அல்லது கைபேசி எண்கள் எழுத வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் நாகவேல், கனிமொழிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story