சிறுமியை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது


சிறுமியை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது
x
தினத்தந்தி 2 July 2021 10:49 AM IST (Updated: 2 July 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் 54 வயதானவர். இவரது 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து அவர்கள் செம்மஞ்சேரி போலீசில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

போலீஸ் விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் அவரது தந்தை என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் தந்தையை கைது செய்தனர்.

Next Story