மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு + "||" + Rescue of a cow that fell into a well

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, விவசாயி. இவர் தனது தோட்டத்து வீட்டில் 3 பசுக்களை வளர்த்து வந்தார். அதில் ஒரு பசு நேற்று அவரது கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசு திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 30 அடி ஆழம் கொண்ட அந்தக்கிணற்றில் 15 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் மாடு தண்ணீரில் தத்தளித்த படி சத்தம் போட்டது. அதன் அலறல் சத்தம் கேட்டு முத்துப்பாண்டி ஓடி வந்து பார்த்தபோது கிணற்றுக்குள் பசுமாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் போஸ் தலைமையிலான தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி கிணற்றில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு