மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது


மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 9:40 PM IST (Updated: 2 July 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பூலக்குன்று பகுதியில் அம்பலமூலா இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து சேரங்கோடு நோக்கி வந்த மொபட்டை மறித்து சோதனை செய்தனர். 

அப்போது சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்து 5-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கடத்தி வந்த விஜயகுமார்(வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டார். 

இதேபோன்று கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நம்பியார்குன்னு பகுதியை சேர்ந்த கணேசன்(33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story