மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த ஆண் பிணம் மீட்பு + "||" + Recovery of male body floating in the river

ஆற்றில் மிதந்த ஆண் பிணம் மீட்பு

ஆற்றில் மிதந்த ஆண் பிணம் மீட்பு
ஆற்றில் மிதந்த ஆண் பிணம் மீட்பு.
கூடலூர்,

கூடலூர் அருகே பாண்டியாறு ஆற்றில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக தேவாலா போலீசுக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தொடர்ந்து ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்டனர்.  மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.