விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ கஞ்சா பறிமுதல்


விசாகப்பட்டினத்தில் இருந்து  ரெயிலில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2021 9:48 PM IST (Updated: 2 July 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ கஞ்சா பறிமுதல்.

காட்பாடி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வந்தது.

ரெயில் வந்ததும் அந்த ரெயில் பெட்டிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் உள்ள இருக்கைகளுக்கு அடியில் 4 பைகள் கேட்பாரற்று கிடந்தன. அதனை சோதனை செய்த போது அதில் 42 கிலோ கஞ்சா பார்சல் செய்யப்பட்டு இருந்தது.

அதனை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. போலீசார் கஞ்சாவை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்துக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் அந்த கஞ்சா பொட்டலங்களை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில் மூலம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுக்க சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story