ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2021 4:39 PM GMT (Updated: 2 July 2021 4:39 PM GMT)

நாகூர் அருகே, வீட்டில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவரை கைது செய்தனர்.

நாகூர்:
நாகூர் அருகே, வீட்டில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவரை கைது செய்தனர்.

கண்காணிப்பு பணி

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரிலும், துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன் அறிவுறுத்தல் படியும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ராஜாராமன்(வயது68) என்பவர் வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.  

புகையிலை பொருட்கள் பறிமுதல்
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 754 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story