மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது. 20 வாகனங்கள் பறிமுதல் + "||" + 2 arrested for stealing motorcycles

ராணிப்பேட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது. 20 வாகனங்கள் பறிமுதல்

ராணிப்பேட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது. 20 வாகனங்கள் பறிமுதல்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது. 20 வாகனங்கள் பறிமுதல்
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு, பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில் (வயது 29), பயாஸ் (21) என்பது தெரியவந்தது.

இருவரும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தினகிரி, சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.