செஞ்சி, திண்டிவனத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
இடி-மின்னலுடன் பலத்த மழை
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிடைந்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக செஞ்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 7 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக செஞ்சி பஸ் நிலைய வளாகம் மற்றும் நகர கடை வீதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழை பெய்தபோது, செஞ்சி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழையின்போது மேல் எடையாளம் கிராமத்தை சேர்ந்த சிவபாலன் என்பவருடைய பசுமாடு மின்னல் தாக்கி செத்தது. இதேபோல் திண்டிவனம் நகரில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை இடி-மின்னலுடன் பலத்தமழை கொட்டியது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களில் இருந்த கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த மழை காரணமாக திண்டிவனம் நகரில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Related Tags :
Next Story