தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்
தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்
கோவை
கோவையில் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையில் டோக்கன் வழங்குவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க மாநக ராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
இதையொட்டி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் உள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். அவர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை தவிர்க்க டோக்கன் வழங்கப்படுகிறது.
அதை வாங்கு வதற்காக அதிகாலையிலேயே வந்து நீண்டநேரம் பலர் காத்திருக்கின்ற னர். ஆனாலும் டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று காலை கோவை 80 அடி ரோடு ஒலம்பஸ் மாநகராட்சி பள்ளியில் அதிகாலையில் 700-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதில் 250 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்த சுகாதார ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் டோக்கன் வாங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் 250 பேருக்கு டோக்கன் வழங்குவதாக கூறி விட்டு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் உடையாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதல் முறையாக 250 தடுப்பூசி போடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு பரிசோதனை
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்பூசி போடுவதற்காக 4 நாட்களாக தொடர்ந்து சென்றும் டோக்கன் கூட வாங்க முடிய வில்லை. எனவே ஒவ்வொரு மையத்துக்கும் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றனர்.
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களு டன் இயங்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனால் கோவைக்கு வட மாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் வருவது அதிகரித்து உள்ளது.
அவர்களுக்கு ரெயில் நிலைய வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களிடம், பரிசோதனை முடிவுகள் வரும் வரை 3 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
Related Tags :
Next Story