மாவட்ட செய்திகள்

ரோந்து போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா + "||" + Uniform fitting camera for patrol police

ரோந்து போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா

ரோந்து போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா
ரோந்து போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா
கோவை

போலீசாரின் சீருடையில் பொருத்தும் பாடி கேமராக்கள் தற்போது தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்படுகிறது. 

ரோந்து செல்லும் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள், சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் தகராறு ஏற்பட்டால் அதை பதிவு செய்ய வசதியாக இந்த கேமராக்கள் உதவுகிறது.

 கோவை நகர போலீசில் ஏற்கனவே ரோந்து செல்லும் போலீசார் 53 பேருக்கு சீருடையில் பொருத்தும் பாடி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கோவை மாவட்ட போலீசில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் 15 போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. 

அப்போது, போலீசாரின் சீருடையில் கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பொருத்தினார்.