வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
வெளிப்பாளையம்:
நாகை வெளிப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வெளிப்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த ரமேஷ் (வயது47), அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (40), தர்ம கோவில் தெருவை சேர்ந்த விஜயா (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story