மாம்பட்டு கிராமத்தில் சூறைக்காற்றால் மரம் விழுந்து குடிசைகள் சேதம்


மாம்பட்டு கிராமத்தில் சூறைக்காற்றால் மரம் விழுந்து குடிசைகள் சேதம்
x
தினத்தந்தி 2 July 2021 10:26 PM IST (Updated: 2 July 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றால் மரம் விழுந்து குடிசைகள் சேதம்

வந்தவாசி

வந்தவாசி அருகே மாம்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில்  சின்னராஜ், எல்லம்மாள், காசி ஆகியோர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வேப்பமரம் திடீரென வீடுகள் மீது விழுந்தது. இதில் சின்னராஜ், எல்லம்மாள், காசி ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. 

மரம் முறியும் சப்தம் கேட்டு அந்த குடிசையில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஊராட்சி நிர்வாகத்தால் மாம்பட்டு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story