மாவட்ட செய்திகள்

சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேர் கைது + "||" + Four people have been arrested, including a boy who smuggled alcohol

சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேர் கைது

சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேர் கைது
நாகூர் அருகே சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகூர் அருகே சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

நாகூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகூர்-திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.இதில் புதுச்சேரி சாராயம் இருந்தது. 
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் மெயின் ரோடு தெற்குதெருவை சேர்ந்த ராமு மகன் ராஜா (வயது 27), அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மகன் மணிகண்டன் (24) என்பதும், இவர்கள் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கைது

அதைதொடர்ந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த நாகை கோட்ட வாசல்படி நடராஜன் பிள்ளை தெருவை சேர்ந்த தமிழரசன் மகன் சபினேஷ் (20) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  4 மதுபானம் பாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.