ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2021 5:01 PM GMT (Updated: 2 July 2021 5:01 PM GMT)

கச்சிராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கச்சிராயப்பாளையம் மட்டுமின்றி வடக்கநந்தல், அம்மாபேட்டை, காரனூர், குதிரைச்சந்தல், நல்லாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான அறை, எக்ஸ்ரே அறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம் கர்ப்பிணிகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன், டாக்டர்கள் சுதர்சன், அருள் ஜோதி, தாசில்தார் விஜயபிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் கவுதம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story