மணியகாரம்பாளையம் மையத்தில் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி
மணியகாரம்பாளையம் மையத்தில் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி
கணபதி
கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், மாநகராட்சி 41 -வது வார்டு மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பிறகு அந்த மையத்தில் தடுப்பூசி செலுத்த வில்லை. இதனால் அந்த பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து தினத்தந்தியில் கடந்த மாதம் 18-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளி மையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக் கை எடுத்தனர். அதன்படி அங்கு நேற்று 250 பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டது.
இதனால் பயன் அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story