மதுபாட்டில்கள் சரக்கு வாகனம் பறிமுதல்
தினத்தந்தி 2 July 2021 10:39 PM IST (Updated: 2 July 2021 10:39 PM IST)
Text Sizeமதுபாட்டில்கள் சரக்கு வாகனம் பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் மீனாட்சிபுரத்தில் ஆனைமலை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து மதுபாட்டில்களை வாகனங்களில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 லிட்டர் கேரள மதுபாட்டில்கள், அவற்றை கடத்தி வந்த சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire