நகராட்சி தூய்மை பணியாளர்கள் 340 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நகராட்சி தூய்மை பணியாளர்கள் 340 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நடந்தது.
இதில் 340 தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகியும் நகராட்சி தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை.
தற்போது தூய்மை பணியாளர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story