மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு + "||" + Death of a farmer trapped in an electric fence

மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு

மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 50). விவசாயியான இவர் பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் முனிகிருஷ்ணன் என்பவர் தான் பயிர் செய்திருந்த மணிலாவுக்கு காட்டு பன்றிகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டதால் யாருக்கும் தெரியாமல் மின்வேலி அமைத்து இருந்தார். இதை அறியாத ஏழுமலை அந்த வயல் வழியாக செல்ல முயன்றபோது மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்னல் தாக்கி விவசாயி பலி
குன்னம் அருகே மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
2. பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு
பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார்
3. பள்ளத்தில் கார் கவிழ்ந்து விவசாயி பலி
குன்னம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
4. பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த விவசாயி சாவு
பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5. குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
குளத்தில் மூழ்கி விவசாயி இறந்தார்.