திருப்பத்தூரில் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
குடிநீர் வழங்காததை கண்டித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
குடிநீர் வழங்கவில்லை
திருப்பத்தூர் டவுன் அபாய்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. தற்போது ஒரு மாதம் ஆகியும் குடிநீர் வழங்கவில்லை.
இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகம், கலெக்டர், எம்.எல்.ஏ, உள்ளிட்டவர்களிடத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைதக்காமல் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு மாதமாகியும் குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
பின்னர் ஊர்வலமாக வந்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நகராட்சி அதிகாரிகள், போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், கழிவுநீர் கலப்பதை சரி செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story