தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. இதேபோல் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- தர்மபுரி-45, பென்னாகரம்-12, பாலக்கோடு-94, பாப்பிரெட்டிப்பட்டி-16, அரூர்- 12, ஒகேனக்கல்-37, மாரண்டஅள்ளி- 14.2, மாவட்டம் முழுவதும் 230.2 மி.மீ. மழை பதிவானது.
இந்த மழை காரணமாக நேற்று பகலில் தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தது. நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story