வீட்டுக்குள் புகுந்த 11 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த 11 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 2 July 2021 11:08 PM IST (Updated: 2 July 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்குள் புகுந்த 11 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது

வாணியம்பாடி

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் பசுபதி. இவரது வீட்டின் பின்புறம் சுமார் 11 அடி நீள சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர் ஜாப்ரபாத் பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ்கான் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த இலியாஸ் கான் சார பாம்பை ஒரு மணி நேரபோராட்டத்திற்கு பிறகு லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த சாரை பாம்பை சாக்குப்பையில் கட்டி ஆலங்காயம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். வனத்துறையினர், அந்த பாம்பை அடர்ந்த காப்பு காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Next Story