மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ + "||" + fire

மரக்கடையில் திடீர் தீ

மரக்கடையில் திடீர் தீ
சிங்காரப்பேட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கல்லாவி:
பாவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவர் சிங்காரப்பேட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை இவரது கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மரக்கடை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி கடையில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கட்டில், சேர், மேஜை உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.