பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது


பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 11:11 PM IST (Updated: 2 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது

கீரமங்கலம், ஜூலை.3-
கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் தனது  மகள் பாரதி (வயது 29) என்பவரை அறந்தாங்கி அருகே உள்ள மருதங்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வீரசேகர் (35) என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பாரதி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு வீரசேகர் பெரியாளூரில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று, அவரை தாக்கினார். இது குறித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசேகரை கைது செய்தனர்.

Next Story