சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2021 11:23 PM IST (Updated: 2 July 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.3-
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சாலையோர வியாபாரிகளுக்கான சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வில் தெரு வியாபாரிகள் முன்பு வியாபாரம் செய்த இடத்திலேயே அனுமதிக்க வேண்டும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் வியாபார சான்று, பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பான மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணனிடம் வழங்கினர்.

Next Story