ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நீக்கப்பட்ட செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். மீண்டும் பணி வழங்கக்கோரி மனு


ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில்  நீக்கப்பட்ட செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். மீண்டும் பணி வழங்கக்கோரி மனு
x
தினத்தந்தி 2 July 2021 11:28 PM IST (Updated: 2 July 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நீக்கப்பட்ட செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்

திருப்பத்தூர்

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில கடந்த மே மாதம் முதல் தற்காலிக ‘கோவிட்-19’ செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.
அவர்கள் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி  பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுவரை வேலை பார்த்த அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

அப்போது கலெக்டர் அங்கு இல்லை இதனால் அங்கிருந்த அதிகாரிகள் கலெக்டர் வெளியில் சென்று உள்ளதாக கூறினார். ஆனால் நாங்கள் கலெக்டரை சந்திக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், ‘‘கொரோனா தொற்று காலத்தில் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ‘கோவிட்’ தடுப்பு பணியில் இணைந்து நாங்கள் பணியாற்றினோம். எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆவன செய்ய வேண்டும்’’ என்று மனு கொடுத்தனர். 

Next Story