கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கீழக்கரை,
தமிழகத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிகுமார் தலைமையில் நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கீழக்கரை நகர் முழுவதும் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறனர். அப்போது கீழக்கரை சீதக்காதி சாலையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி செல்பவர்கள் மட்டும் விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு துணை தாசில்தார் பழனி குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சாலைகளில் முகக்கவசம் இல்லாமல் செல்லக் கூடிய ஏழை எளிய மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் சானிைடசர் வழங்கினார். அப்போது முதல் நிலை வருவாய் ஆய்வாளர் காசிநாதன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகதரசன் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story