ராசிபுரம் அருகே மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது


ராசிபுரம் அருகே மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 July 2021 11:33 PM IST (Updated: 2 July 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அவர்கள் 120 மதுபாட்டில்களை வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 வாலிபர்களும் திருச்சி மாவட்டம் துறையூர் தாத்தையங்கார்பேட்டை பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) மற்றும் விக்னேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story