மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு + "||" + Car theft

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு
குளித்தலை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திருடப்பட்டது. இதையடுத்து தப்பியோடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை
கார் திருட்டு
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 64). விவசாயி, இவர் நேற்று காலை தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கார் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 
மேலும் தனது வீட்டின் ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த கார் சாவியை தேடி பார்த்தபோது கார் சாவி அங்கு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெங்கடாசலம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் உஷார்
 இதையடுத்து குளித்தலை போலீசார் கரூர், திருச்சி, மணப்பாறை பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடி போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நச்சலூர் வி.ஆர்.ஓ. காலனி அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த கார் வலையப்பட்டியில் இருந்து திருடப்பட்ட வெங்கடாசலத்தின் கார் என்று தெரியவந்துள்ளது. 
பரபரப்பு
இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த கார் திருட்டு குறித்து போலீசார் விசாரித்தபோது காரை திருடிய நபர் வலையப்பட்டியில் இருந்து திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதி வரை சென்றதாகவும் அங்கிருந்த சோதனை சாவடியில் போலீசார் இருப்பதை பார்த்த அந்த மர்ம நபர் மீண்டும் தான் வந்தவழியே சென்று அந்த காரை நச்சலூர் வி.ஆர்.ஓ.காலனி அருகே அந்த காரை நிறுத்திவிட்டு தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.
 காரைத் திருடிய மர்ம நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காரின் மதிப்பு ரூ 6 லட்சம் ஆகும். குளித்தலை அருகே கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கார் திருட்டு
காரைக்குடி அருகே கார் திருடு போனது.
2. கடலூரில், நூதன முறையில் கார் திருடிய 2 பேர் கைது
கடலூரில், நூதன முறையில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.