நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2021 6:13 PM GMT (Updated: 2 July 2021 6:13 PM GMT)

காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு  ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.இ்தில் நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அப்பாஸ், ரவிச்சந்திரன், முத்துராஜ், தூய்மைபணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன், ராமராஜ், முருகன், ஆதி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சண்முகம், சோனை முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரியும், வங்கி கடன்கள் வழங்க வேண்டியும், சாலையோர குத்தகையை தனியாருக்கு வழங்காமல், நகராட்சியே ஏற்று நடத்தக்கோரியும், கொரோனா ஊரடங்கு நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்து 500-ஐ வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Next Story