மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே இருந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது + "||" + Groove

சாலையின் நடுவே இருந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது

சாலையின் நடுவே இருந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சாலையின் நடுவே இருந்த பள்ளம் சரிசெய்யப்பட்டது
வெள்ளியணை
கரூர் மாவட்டம், செல்லாண்டிபுரத்தை அடுத்த ராஜலிங்கம்புரம் பகுதியில் புலியூர்- மணப்பாறை மாநில சாலையின் நடுேவ  தார் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால் சாலையில் ஏற்பட்ட  பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வைத்த கோரிக்கை குறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை சரிசெய்தனர். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.