அரசு கலைக்கல்லூரி காவலர்கள், பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அரசு கலைக்கல்லூரி காவலர்கள், பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தலைமை தாங்கினார். இதில் ரூ.1,400 மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story