கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 3 July 2021 12:42 AM IST (Updated: 3 July 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய பசுமாடு அப்பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரமாக மாடு தண்ணீரில் தத்தளித்தது. இதை அறிந்த கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சக்திவேல், ராஜா ஆகியோர் அங்கு வந்து, கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

Next Story