மாவட்ட செய்திகள்

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு + "||" + Bhairavashtami worship at Shiva temple

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதற்கான ஏற்பாடுகளை அஷ்டமி வழிபாட்டு குழுவினர் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது.
2. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
3. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
4. ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
5. அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.