மாவட்ட செய்திகள்

புதிதாக 62 பேருக்கு கொரோனா + "||" + corona

புதிதாக 62 பேருக்கு கொரோனா

புதிதாக 62 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,669 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,607 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாக வில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 172 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை மையங்களில் 47 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், ஆமத்தூர், பாண்டியன் நகர், சூலக்கரை, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, ராமானுஜபுரம், பாலையம்பட்டி, பந்தல்குடி, கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திபட்டி, செங்குளம், கல்விமடை, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 19 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 62 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1,756 பேருக்கு கொரோனா: சென்னை, கோவையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கோவையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
2. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர்.
3. மேலும் 15 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 23 பேருக்கு கொரோனா தொற்று
23 பேருக்கு கொரோனா தொற்று