மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலி + "||" + Farmer killed

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலி

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பலி
சேத்தூர் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி பரிதாபமாக பலியானார்.
தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் தங்கசாமி ஆசிரியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற செந்தில் குமார் (வயது 58), விவசாயி. இவர் நேற்று மாலை அசையா மணி கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள இவரது தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 
இதுபற்றி தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
வடமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து விவசாயி பரிதாபமாக பலியானார்.
3. வந்தவாசி அருகே; மின்சாரம் தாக்கி விவசாயி பலி
வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
4. குளத்தில் மூழ்கி விவசாயி பலி
மீன்சுருட்டி அருகே மாட்டை குளிப்பாட்டியபோது குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5. மின்னல் தாக்கி விவசாயி பலி
மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.