சிறுமி கடத்தலா?
சிறுமி கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மகள் மோகனப்பிரியா(வயது 17). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரை காணாததால், உறவினர்கள், தோழிகள் உள்ளிட்டோர் வீடுகளில் கொளஞ்சிநாதன் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து, மோகனப்பிரியாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story