உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை


உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 3 July 2021 1:14 AM IST (Updated: 3 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் குறைந்து, மாலையில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இரவில் வானில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கழுமங்கலம், நாகல்குழி, பிளாக்குறிச்சி, முனையதரையன்பட்டி, கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி, தத்தனூர், ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story