நெல்லையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


நெல்லையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 3 July 2021 1:32 AM IST (Updated: 3 July 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நிறுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசிகள், சிறப்பு முகாம்கள் மூலம் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்களில் போடப்படவில்லை.
இதன்பின்னர் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்திற்கு தடுப்பூசி வந்ததை தொடர்ந்து அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்தது.

மருத்துவக்கல்லூரி

இதேபோல் நேற்று காலையில் நெல்லை மருத்துவக்கல்லூரியில் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் உடல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருந்ததால் அங்கிருந்து அவரது உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இன்று

மேலும் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையமும் மூடிக்கிடந்தது. இன்று (சனிக்கிழமை) வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும், என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story