மாவட்ட செய்திகள்

வீட்டில் விபசாரம்; 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது + "||" + Home prostitution 6 arrested including 3 female brokers

வீட்டில் விபசாரம்; 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது

வீட்டில் விபசாரம்; 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது
கொல்லங்கோடு அருகே வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 3 பெண் புரோக்கர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 3 பெண் புரோக்கர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக நேற்று கொல்லங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் அடைக்காகுழி பகுதிக்கு விரைந்து சென்றனர். 
6 பேர் கைது
அங்கு ஜெயக்குமாரி என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரைகுறை ஆடைகளுடன் இருந்த இளம்பெண்கள் போலீசாரை கண்டதும் தப்பிேயாடி விட்டனர். பின்னர், அங்கிருந்த ஜெயக்குமாரி (வயது 46), கேரள மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த மேரி (52), மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த கவிதா (30) ஆகிய 3 பேர் மற்றும் பைங்குளம் பருத்திகடவை சேர்ந்த அஜிகுமார் (45), பாலராமபுரத்தை சேர்ந்த கண்ணன் (49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சுமித் (49) என 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
 அப்போது, ஜெயக்குமாரி, மேரி, கவிதா ஆகிய 3 பேரும் புரோக்கர்களாக செயல்பட்டதும் அங்கு விபசாரம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெயக்குமாரி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.