மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது + "||" + Youth arrested for stealing jewelery from grandmother

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
நெல்லையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை படப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அரிகர சுப்பிரமணியன் (வயது 28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.சி. நகர் அருகே பாரதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தினார்.
இதில் சத்திரம் புதுகிராமம் பகுதியை சேர்ந்த சின்ன கவுண்டர் என்ற இலுப்புடையான் (26) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சின்ன கவுண்டரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் அருணாச்சல நகர் காலனியில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தங்க நகையை மீட்டனர்.