ஆத்தூில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: முத்திரைத்தாள் அதிகாரி பணி இடைநீக்கம்


ஆத்தூில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: முத்திரைத்தாள் அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 July 2021 8:22 PM GMT (Updated: 2 July 2021 8:22 PM GMT)

ஆத்தூில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் முத்திரைத்தாள் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் முத்திரைத்தாள் தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய் ஆய்வாளராக அப்பம்மசமுத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது34) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு குறித்து, முத்திரைத்தாள் தனி துணை கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டி ஒருவர் செந்தில்குமாரை அணுகியுள்ளார். அப்போது அவர், விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், போலீசாரின் அறிவுரைப்படி செந்தில்குமார் வீட்டுக்கு சென்று ரூ.35 ஆயிரம் கொடுத்தார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா உத்தரவிட்டார்.


Next Story