மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 3-வது வாரமாக 58 மணி நேர வார இறுதி ஊரடங்கு தொடங்கியது + "||" + The 58-hour weekend curfew began

கர்நாடகத்தில் 3-வது வாரமாக 58 மணி நேர வார இறுதி ஊரடங்கு தொடங்கியது

கர்நாடகத்தில் 3-வது வாரமாக 58 மணி நேர வார இறுதி ஊரடங்கு தொடங்கியது
கர்நாடகத்தில் 3-வது வாரமாக 58 மணி நேர வார இறுதி ஊரடங்கு தொடங்கியுள்ளது.
பெங்களூரு:
  
ஊரடங்கு கட்டுப்பாடுகள்

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2 கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கூட்டம் இன்றைக்கு (சனிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே 3-வது வாரமாக வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்று இரவு 7 மணி முதல் தொடங்கியது. 58 மணி நேர ஊரடங்கு வருகிற 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மருந்து கடைகள், பால் விற்பனை கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள்

  அரசு-தனியார் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தனிநபர் வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். அரசு-தனியார் மருத்துவமனைகள், ஆம்புலன்சு வாகனங்கங்கள் இயங்க எந்த தடையும் இல்லை.

  மருத்துவனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல தடை இல்லை. தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தங்களின் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.