பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 3 July 2021 1:58 AM IST (Updated: 3 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பேட்டை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி இளங்காமனி (வயது 50). இவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை மனைவி சூர்யா (24) புல் அறுக்க சென்றுள்ளார். இதனை இளங்காமனி தட்டி கேட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே புல் அறுக்கும் அரிவாளால் சூர்யா, இளங்காமனியை வெட்டினார். இதில் அவர் காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கரெட் தெரசா வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தார்.

Related Tags :
Next Story