மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி + "||" + The central government is ready to bring petrol-diesel under GST

பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
பெங்களூரு:
  
  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிலுவைத்தொகை

  பெட்ரோல்-டீசல் விலை குறைய மாநிலங்கள் தங்களின் வரியை குறைக்கலாம். பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. இதன் விலையை குறைப்பது என்பது மாநிலங்களின் கையில் தான் உள்ளது. இந்த பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் பூஜ்ஜிய வரி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை பட்டியலில் சேர்க்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுத்தாலே போதுமானது. நடப்பு ஆண்டில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை வழங்கும் திட்டம் இல்லை.

  ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, மாநிலங்கள் கடன் பெற்று பற்றாக்குறையை சரிசெய்து கொள்ள வேண்டும். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று கியாஸ் சிலிண்டர்களை வழங்கினோம். ஆயினும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தடுப்பூசி

  அத்தியாவசிய உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்பு முடிவடைய 7 நாட்களுக்கு முன்பே தடுப்பூசி தேவை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 14-வது நிதி குழு பரிந்துரைப்படி கர்நாடகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதை நான் தடுப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். இது தவறான தகவல்.

  கர்நாடகத்திற்கு தொந்தரவு ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. வருவாய் பற்றாக்குறையை நிர்ணயித்ததை விட அதிகமாக காட்டியதால் கர்நாடகா, தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது நிறுத்தப்பட்டது. நான் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். ஆனால் எதிர்பார்ப்புக்கு தக்கபடி என்னால் பணியாற்ற முடியவில்லை. கர்நாடகத்தில் இருந்து நிறைய பேர் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருக்கையில் எல்லாவற்றுக்கும் நான் ஒருவர் மட்டுமே காரணம் அல்ல.
  இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.